மன்னார் மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினரின் ஊடகவியலாளர்கள் மாநாடு
மன்னார் மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினரின் ஊடகவியலாளர்கள் மாநாடு
31-05-2018 இன்று காலை 11மணியளவில் மன்னார் மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் ஜனாப் U.L.A.மஜீத்
மா.இ.சே.அதிகாரி திரு.T.பூலோகராஜா
இவர்களுடன் மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
13 வயது தொடக்கம் 29 வயது வரையான இளைஞர்கள் இணைந்து தமது திறமையினையும் ஆளுமையினையும் அபிவருத்தி செய்வதற்கான ஒரு களமாக அமைகின்றது இந்ததேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் அமையப்பெற்றுள்ளது.
இளைஞர்களுக்கான செயற்பாடுகளாக
- பயிற்சிகள் பட்டறைகள்(கணணி-தையல்-)
- இளைஞர் கழகங்கள் அமைத்தல்
- பிரதேச சம்மேளனம் அமைத்தல்
- மாவட்ட சம்மேளனம் அமைத்தல்
- வெளிநாட்டு வேலைத்திட்டத்திற்கு இளைஞர் யுவதிகளை தெரிவு செய்தல்
- இளைஞர் முகாம் அறிவூட்டல் செயலமர்வு
- கரப்பந்தாட்டப்போட்டி விளையாட்டுக்கள்
- யொவன் புர வேலைத்திட்டம் போன்ற செயற்பாடுகளை செயலாற்றி வருவதாகவும்
- இவ்வாண்டு புதிதாக 15வேலைத்திட்டங்களை செய்யவிருப்பதாகவும் அதாவது மன்னார் மாவட்டத்தில் உள்ள 05பிரதேச செயலகங்களில் உள்ள கிராமங்களில் காணப்படுகின்ற குறைபாடுகள் அவசியமான அபிவிருத்திப்பணிகள் இனங்கண்டு அவற்றினை இளைஞர்கள் தங்களது ஆளுமையின் மூலம் செயலாற்ற வேண்டும் அதற்கான ஊக்கத்தொகையாக இம்முறை ரூபா 300000 தேசிய இளைஞர் சம்மேளனம் வழங்கும் இளைஞர்களின் பங்களிப்பும் அதிகமாக இருக்கவேண்டும் தரமான அபிவிருத்திப்பணிகள் 1ம் 2ம் 3ம் இடங்களுக்கு மாவட்ட ரீதியில் 5இலட்சம் 3இலட்சம் 2இலட்சம் பரிசும் தேசிய ரீதியில் 1ம் இடத்திற்கு 1கோடியும் வழங்கப்படும்.
ஊடகவியலாளர்களின் கருத்து-
வருகின்ற 05-06-2018 சுற்றாடல் தினம் என்பதால் இளைஞர்கள் மத்தியில் மரம் வளர்த்தல் சுழுலை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புனர்வு ஊர்வலம் ஒன்றை நடத்துதல் அவசியம் என்று சொன்னபோது அதைசெய்வதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்றுக்கொண்டு இணைந்துசெயலாற்றுவோம் .
இளைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகளானது தொழில் உத்தரவாதம் உள்ளதா என்ற கேள்விக்கு....
மிகவிரைவாக எமது மன்றத்தால் வழங்கப்படுகின்ற பயிற்சிகள் நிறைவில் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களும் NVQ-04 தரத்தில் இருப்பதோடு வேலை உத்தரவாதமும் இருக்கும் என்றார்.
க.பொ.த சாதாரண தரம் க.பொ.த உயர்தரம் மற்றும் பாடசாலை இடைவிலகிய மாணவர்களுக்கான செயற்பாடுகள் மிகவிரைவாக துரிதப்படுத்துவதோடு அவர்களின் கிராமப்புறங்களுக்குசென்று அவர்களுடன் கதைத்து ஆலோசனைகள் வழங்கி (கல்வி கற்றல் விடையங்கள்-13வருடக்கற்கை மற்று திறந்த பல்கலைக்கழகம் ஏனைய பயிற்சிகள)முழுமையான செயற்பாட்டினை இளைஞர் சேவைகள் மன்றம் செயலாற்றவேண்டும் என ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஊடவியலாளர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் சேவைகள் மன்ற அதிகாரிகள் இவ்வாண்டில் இருந்தே செயற்பாடுகளைமுன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-

மன்னார் மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினரின் ஊடகவியலாளர்கள் மாநாடு
Reviewed by Author
on
June 01, 2018
Rating:

No comments:
Post a Comment