ஐ.நா அவைக்குள்ளே மயங்கி வீழ்ந்த தமிழ் பெண் -
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்ட தொடர்இடம்பெற்று வரும் நிலையில், இதன் பக்க அறையில் கூட்ட தொடர் ஒன்று இடம்பெற்றது.
இதில் ஈழத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐந்து பேர் கலந்துகொண்டிருந்தனர். இந்த கூட்டத்தின் போது இலங்கை இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள் மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர். இதன்போது மயக்கமடைந்த தமிழ் பெண் ஒருவர் ஜெனிவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தோழர் திருமுருகன் காந்தி, “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், தமிழீழத்தில் இலங்கை அரசால் கடத்தப் பட்டோர் பற்றி வாக்குமூலம் அளிக்க வந்த அப்பாவி தமிழர்களை இலங்கை அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.
இதன் மூலம் இலங்கை அரசின் அராஜகம் உச்சகட்டத்தை அடைகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா அவைக்குள்ளே மயங்கி வீழ்ந்த தமிழ் பெண் -
Reviewed by Author
on
June 26, 2018
Rating:

No comments:
Post a Comment