கிம் - டிரம்ப் சந்திப்பு: பாதுகாப்பு பணியில் களமிறங்கும் கூர்க்காப்படை -
எதிர்வரும் 12-ஆம் திகதி சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமைந்துள்ள கேபெல்லா ஹொட்டலில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற உள்ளது.
இதில் அணு ஆயுதங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். வடகொரியா அணு ஆயுதங்களை முழுவதுமாக கைவிடுவது குறித்தும் இதில் முடிவெடுக்கப்படும்.
சமீப காலமாக யார் எதிர்பார்க்காத வகையில் வடகொரிய தலைவரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக தென் கொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார்.
மட்டுமின்றி வடகொரிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கிம் ஜாங் உன் ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் உள்ள Sentosa தீவில் டிரம்பை சந்திக்க உள்ளார்.
உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பானது நடைபெற உள்ளது.
இதற்காக கேபெல்லா ஹொட்டல் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி இரு நாட்டு தலைவர்களும் தங்களது தனிப்பட்ட பாதுகாவலர்களை அழைத்து வருகிறார்கள்.
அதே சமயம் சிங்கப்பூர் சார்பாக அவர்களுக்கு கூர்க்கா பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. சுமார் 500க்கும் அதிகமான கூர்க்காக்கள் இன்றில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்கள் நேபாளத்தை பூர்வீகமாக கொண்டவர்களாவர். உலகின் மிகவும் மூர்க்கமான பாதுகாவலர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பல நாட்டு தலைவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 200 ஆண்டுகளாக, சிங்கப்பூரில் கூர்க்கா படை செயல்பட்டு வருகிறது. கூர்க்கப்படையினரின் முக்கிய ஆயுதமாக மிக வளைந்த khukri கத்திகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
ஒருமுறை அந்த கத்தியின் உறையில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் ரத்தம் காணாமல் உறைக்கு உள்ளே கூர்க்காக்கள் வைப்பதில்லை என கூறப்படுவதுண்டு.
கிம் - டிரம்ப் சந்திப்பு: பாதுகாப்பு பணியில் களமிறங்கும் கூர்க்காப்படை -
Reviewed by Author
on
June 06, 2018
Rating:
Reviewed by Author
on
June 06, 2018
Rating:


No comments:
Post a Comment