இந்து மத விவகார பிரதி அமைச்சு முஸ்லிம் அமைச்சரிடம் இருந்து பறிப்பு -
அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதில், காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சுப்பதவிகளில் இந்து மத விவகார அமைச்சு இருக்காது என இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சுப் பதவியே காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்து மத விவகார அமைச்சுப்பதவி வர்த்தமானியில் வராது எனவும் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலகத்தினால் இந்த விடயம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கும், ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்த நிலையிலேயே காதர் மஸ்தானிடம் இருந்து இந்து மத விவகார அமைச்சு நீக்கப்பட்டுள்ளமை உறுதியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து மத விவகார பிரதி அமைச்சு முஸ்லிம் அமைச்சரிடம் இருந்து பறிப்பு -
Reviewed by Author
on
June 14, 2018
Rating:

No comments:
Post a Comment