மன்னாரில் நுண் நிதிக்கடனுக்கு எதிராக கவணயீர்ப்புப் பேரணி.(photos)
நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் பாதீக்கப்படும் மக்களையும் குறிப்பாக பெண்களை பாதுகாக்கவும், நுண் நிதிக் கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்திற்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக மன்னாரில் இன்று வியாழக்கிழமை(14) காலை கவனயீர்ப்புப் பேரணி இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும்,மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஒருங்கிணைப்பில் இன்று வியாழக்கிழமை (14) காலை 10.30 மணியளவில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் பேரணி ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நிறைவடைந்தது.
குறித்த பேரணியில் பெண்கள் அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள்,பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் நுண் நிதிக்கடன் தொடர்பில் பல்வேறு வசனங்கள் எழுப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
கவணயீர்ப்பு பேரணியின் முடிவில் அரசாங்கத்திற்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் வகையில் கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
June 14, 2018
Rating:

No comments:
Post a Comment