24 மணிநேரத்தில் 42 மில்லியன் டொலர் ஈட்டிய ரொனால்டோவின் ஜெர்ஸி -
ரொனால்டோ இத்தாலியன் கிளப் அணியான யுவெண்டஸ் அணிக்காக 112 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் பொறிக்கப்பட்ட, 7ம் எண் கொண்ட ஜெர்சிகளை ஜூவன்டஸ் வெளியிட்டுள்ளது.
அடிடாஸ் நிறுவனம் மூலம் இந்த ஜெர்சிகள் விற்பனைக்கு வந்துள்ளன. முதல் நாளிலேயே, 5,20,000 ஜெர்சிகள் விற்றுள்ளன. இதன் மூலம், ஜூவன்டஸ் அணிக்கு 42 மில்லியன் டொலர் கிடைத்துள்ளது.
இது 24 மணிநேரத்தில் நடந்த விற்பனை. உலகெங்கும் உள்ள அடிடாஸ் ஷோரூம்கள் மூலம் 20 ஆயிரமும், ஆன்-லைன் மூலம் 5,00,000 ஜெர்சிகளும் விற்கப்பட்டுள்ளன.
ரொனால்டோ ஜெர்சி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 மணிநேரத்தில் 42 மில்லியன் டொலர் ஈட்டிய ரொனால்டோவின் ஜெர்ஸி -
Reviewed by Author
on
July 18, 2018
Rating:
No comments:
Post a Comment