அண்மைய செய்திகள்

recent
-

358 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரித்தானிய கார் பந்தய வீரர் -


பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல Formula 1 கார் பந்தய வீரர் லீவிஸ் ஹேமில்டனை, மெர்சிடிஸ் அணி நிர்வாகம் 358 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல Formula 1 கார் பந்தய வீரர் லீவிஸ் ஹேமில்டன். பிரித்தானியாவைச் சேர்ந்த இவர், மெர்சிடிஸ் அணிக்காக கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

மெர்சிடிஸ் அணியுடன் ஹேமில்டனுக்கு போட்டப்பட்ட ஒப்பந்தம் இம்மாதத்துடன் முடிகிறது. இந்நிலையில், அந்த அணி மேலும் 2 ஆண்டுகளுக்கு ஹேமில்டனை நீட்டித்துள்ளது.
இதற்காக ஹேமில்டனுக்கு ஆண்டுக்கு 358 கோடி எனும் ஒப்பந்தத்தை மெர்சிடிஸ் செய்துள்ளதுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், ஹேமில்டனுக்கு அளிக்கப்பட உள்ள ஊக்கத்தொகை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஹேமில்டன் இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

358 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரித்தானிய கார் பந்தய வீரர் - Reviewed by Author on July 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.