வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணியாற்றும் 6 இலட்சம் பேர் கைது -
மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த 3,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கண்டறியும் நடவடிக்கையை மலேசிய குடிவரவுத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
ஓகஸ்ட் 31 முதல் இத்தேடுதல் வேட்டை தீவிரமாக மேற்கொள்ள உள்ளதுடன், இவ்வாறான தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தானாக முன்வந்து சரணடையும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் திட்டத்தினை தொடங்கியுள்ளதாகவும், அதன் கீழ், சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டினர் ஓகஸ்ட் 30 வரை சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் முஸ்தபர் அலி அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கணக்குப்படி, மலேசியாவில் வெளிநாடுகளை சேர்ந்த 6 இலட்சம் பேர் சட்டவிரோதமாக பணியாற்றி வருகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியா, வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மலேசியாவின் தேயிலை தோட்டங்கள், கட்டுமானப் பணிகள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பல துறைகளில் பதிவு செய்யப்பட்ட சுமார் 20 இலட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணியாற்றும் 6 இலட்சம் பேர் கைது -
Reviewed by Author
on
July 26, 2018
Rating:

No comments:
Post a Comment