அண்மைய செய்திகள்

recent
-

மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்களை சந்தித்தார் வடக்கு சுகாதார அமைச்சர் -

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து சுமார் ஒரு வருடங்களின் பின் கடந்த புதன் கிழமை காலை முள்ளிக்குளம் கிராம மக்கள் தங்கள் காணிகளில் கால் பதித்துள்ளனர்.

குறித்த மக்களை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் இன்று காலை நேரடியாக சென்று சந்தித்து உரையாடினர்.
நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடற்படையினரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் முள்ளிக்குளம் மக்கள் பல வருடங்களாக முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய மலங்காடு எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்ததோடு,மாவட்டத்தின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்தனர். குறித்த மக்களின் காணிகளை கடற்படையினர் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்த போதும் கடற்படையினர் குறித்த மக்களின் காணிகளை விடுவிக்கவில்லை.
இதனையடுத்து, முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த வருடம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி முதல் முள்ளிக்குளம் கிராமத்திற்கான நுழை வாயிலில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சுமார் 38 நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மக்களின் காணிகள் உரிய காலத்தில் விடுவிக்கப்படும் என கடற்படை அதிகாரிகளினால் உறுதிமொழி வழங்கப்பட்ட நிலையில் மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் 3 ஆம் திகதி முள்ளிக்குளம் மக்களின் நூறு ஏக்கர் காணியை விடுவிப்பதாக கடற்கடையினர் அறிவித்திருந்தனர்.
விடுவிக்கப்பட்ட பகுதியின் குறிப்பிட்ட சில இடங்களுக்குள் மட்டுமே மக்களை நடமாட கடற்படை அனுமதித்திருந்தனர்.
ஏனைய காணிகள் காணி அளவீடு செய்யப்பட்டு பின் மக்கள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்தும் முள்ளிக்குளம் கிராம மக்கள் மலங்காடு, காயாக்குளி, மற்றும் மாவட்டத்தின் ஏனைய கிராமங்களிலும் வசித்து வந்தனர்.
முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு ஒரு வருடங்களை கடந்த நிலையிலும், அதிகாரிகள் மீள் குடியேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில், முள்ளிக்குளம் மக்கள் ஒன்றிணைந்து கடந்த 18ம் திகதி காலை கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் சென்றனர்.

பின்னர் தற்காலிக கூடாரங்களை அமைத்த நிலையில் குறித்த காணிகளை துப்பரவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையிலே வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் இன்று காலை நேரடியாக சென்று சந்தித்து உரையாடினர்.
முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரன்ஸ் லியோ தலைமையின் அருட்தந்தையர்களையும் சந்தித்து உரையாடியதோடு அந்த மக்களுக்கு தேவையாக உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்களை சந்தித்தார் வடக்கு சுகாதார அமைச்சர் - Reviewed by Author on July 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.