அண்மைய செய்திகள்

recent
-

8 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அணி சாதனை: 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய வீரர் -


இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஷவ் மகராஜின் அபார சுழற்பந்துவீச்சில் இலங்கை அணி திணறியது.

நேற்று நடைபெற்ற முதலாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் களம் இறங்கினார்கள். கே‌ஷவ் மகராஜ் தனது அபாரமான சுழற்பந்து வீச்சு மூலம் இலங்கை அணிக்கு நெருக்கடி அளித்தார். அதனை சமாளித்து நிதானமாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதத்தை கடந்தனர்.
கருணாரத்னே 110 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 53 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

2010–ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணியின் தொடக்க ஜோடி சொந்த மண்ணில் 100 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்தது இதுவே முதல்முறையாகும்.
அடுத்த 2 ஓவர்களில் குணதிலகா 57 ஓட்டங்களில் அவுட்டானார்.
பின்னர் வந்த வீரர்களும் மகராஜ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியனுக்கு திரும்பியபடி இருந்தார்கள்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்கள் எடுத்தது. அகிலா தனஞ்ஜெயா 16 ஓட்டங்களுடனும், ரங்கனா ஹெராத் 5 ஓட்டங்களுடனும் களத்தில் நின்றனர்.
தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான கே‌ஷவ் மகராஜ் 32 ஓவர்கள் பந்து வீசி 116 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை மண்ணில் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளரின் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அணி சாதனை: 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய வீரர் - Reviewed by Author on July 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.