பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இந்த முறை க.பொ.த உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1ம் திகதி வரையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுகின்றனர். இதில் இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 446 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள்.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலமாக அனுபப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk என்ற இணையதளத்தில் News headline என்ற தலைப்பின் கீழ் அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாவிடின் 0112 784 208, 0112 784 537, 0113 188 350, 0113 140 314 மற்றும் 0718 323 658 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தொலைநகல் மூலம் பரீட்சை அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Reviewed by Author
on
July 20, 2018
Rating:

No comments:
Post a Comment