வடமாகாண சபையில் கடும் அரசியல் நெருக்கடி! ஆளுநர் கூறுவது என்ன? -
வடக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை குறித்து வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைத்திருப்பதாக ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடமாகாண அமைச்சர்கள் சபை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையானது, அரசியல் யாப்புடன் முரண்படாத வகையில் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரினால் அமைச்சுப் பதவி நீக்கப்பட்ட பா.டெனீஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பின் படி, ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்ட பா.சத்தியலிங்கத்துக்கும் அவரது அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட வேண்டிய நிலை இருக்கின்றது.
இந்நிலையில், வடமாகாண சபையில், தற்போது 7 அமைச்சர்கள் இருக்கின்றனர். இது அரசியலமைப்புக்கு விரோதமானதாகும். எனவே, மாகாண அமைச்சர்களை ஐந்தாக குறைக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைத்திருப்பதாக” ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.
வடமாகாண சபையில் கடும் அரசியல் நெருக்கடி! ஆளுநர் கூறுவது என்ன? -
Reviewed by Author
on
July 19, 2018
Rating:

No comments:
Post a Comment