மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆடி பொங்கல்....
ஆடிமாதம் பரவலாக ஏற்படக்கூடிய கொள்ளை நோய்களிலிருந்து மக்களைக் காக்கும்படியாக புனித செபஸ்தியாரை நோக்கி வேண்டுதல் செய்து நேர்த்தியாக பொங்கல் சாற்றும் வழக்கம் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
20- 07- 2018 மாலை 05 மணியளவில் சிறப்பு திருப்பலியுடன் இம்முறையும் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் அவர்களுடன் பங்குத்தந்தையர்கள் பேராலய பங்கு அருட்பணிப் பேரவை இணைந்து.இந்நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.
மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட சுமார் 300 KG அரிசி பொங்கலாக்கப்பட்டதுடன்
ஜோசப்வாஸ் நகருக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு நோயினால் வாடும் மக்களுக்கு வழங்கப்பட்டது சிறப்பான விடையமே..
மதபேதங்களைக் கடந்து மக்கள் இதிலே பங்கெடுத்தமையை காணக்கூடியதாகவிருந்தது.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆடி பொங்கல்....
Reviewed by Author
on
July 21, 2018
Rating:

No comments:
Post a Comment