அண்மைய செய்திகள்

recent
-

விஜய் சேதுபதி! முக்கிய சாதனை


தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுக்கு இணையான இடத்தை விரைவில் பிடித்தவர் விஜய் சேதுபதி. அவருக்கான மாஸ் கூடிக்கொண்டே போகிறது. ஒரு வருடத்தில் அவர் நடிக்கும் படங்கள் அதிகமாகவே வெளிவருகிறது.

தற்போது அவர் ரஜினிக்கு வில்லனாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார். மேலும் தெலுங்கு படங்களிலும் விஜய் சேதுபதி மிக முக்கிய நடிகரான சிரஞ்சீவி படத்தில் நடித்து வருகிறார்.

அவரின் நடிப்பில் அடுத்ததாக ஜுங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. அவரின் படங்களில் விக்ரம் வேதா மிகுந்த பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றது.

புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மாதவனும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சாம் சி.எஸ் இசையமைக்க வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் நேற்றுடன் முதல் வருடத்தை நிறைவு செய்தது. #1YearofBBVikramVedha என டேக் போட்டு கொண்டாடிவருகிறார்.

விஜய் சேதுபதி, மாதவன் மற்றும் மொத்த படக்குழுவுக்கு சினி உலகத்தின் வாழ்த்துக்கள்...

விஜய் சேதுபதி! முக்கிய சாதனை Reviewed by Author on July 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.