அண்மைய செய்திகள்

recent
-

யாழில் வைத்து வடக்கு முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை! -


வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அறிவை விரைவாகவும், திறமையாகவும் புகட்ட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழில் இன்று பட்டத்தாரி ஆசிரியர்களுக்கு நியமங்களை வழங்கி வைத்து உரையாற்றிய போதே பட்டதாரி ஆசியர்களிடம் அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஆசிரியன் எனப்படுபவன் மாணவர்களின் வழிகாட்டியாக அவர்களின் முன்னேற்றத்திற்கான ஒரு முன்னோடியாகத் தன்னை அமைத்துக் கொண்டு மாணவர்களை முறையாக வழிகாட்டி அவர்களை பயன் கொடுக்கும் நற்பிரஜைகளாக உருவாக்குவதற்கு பாடுபடவேண்டும்.

உங்களிடம் கல்வி கற்க வருகின்ற மாணவர்களை நீங்கள் சிறப்பாக கற்பித்து அவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக மாற்றவேண்டிய தார்மீகப் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியத் தொழில் என்பது இறைபணிக்கு ஒப்பானதாகும். ஆசிரியர் தமது வேலைத்தளத்திற்கு சென்றுவிட்டால் அவருக்கு கற்பித்தல் கடமையைத் தவிர வேறு எந்த வேலையும் இருக்காது.

நீண்டகால யுத்தத்தின் விளைவாக பல கோணங்களிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் வடபகுதியில் உள்ள 12 கல்வி வலயங்களிலும் அமைந்துள்ள பாடசாலைகளில், நீங்கள கல்வி கற்பிக்கப் போகின்றீர்கள்.
இந்த மாணவ மாணவியருக்கு கல்வி அறிவை விரைவாகவும் திறமாகவும் புகட்டி அவர்களையும் ஏனைய பகுதிகளில் உள்ள மாணவ மாணவியரின் தரத்திற்கு உயரச் செய்வதற்குப் பாடுபடுங்கள்.
யாழில் வைத்து வடக்கு முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை! - Reviewed by Author on August 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.