மாந்தை மேற்கு விவசாய அமைப்பினால் கைவிடப்பட்ட காத்தான்குளம் நெற் களஞ்சியம் மற்றும் அரிசி ஆலை- பல இலட்சம் ரூபாய் மோசடி-படங்கள்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காத்தான் குளம் கிராமத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு தற்போது வரை எவ்வித செயற்பாடுகளும் இன்றி சேதமாகியுள்ள நிலையில் காணப்படும் 'காத்தான்குளம் நெற் களஞ்சியம் மற்றும் அரிசி ஆலையினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் 15-08-2018 புதன் கிழமை மாலை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
மாந்தை மேற்கு விவசாய அமைப்பின் வேண்டுகோளுக்கு அமைவாக காத்தான் குளம் கிராமத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி உதவியுடன் 19.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த நெற் களஞ்சியம் மற்றும் அரிசி ஆலை புணரமைப்பு செய்யப்பட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு வைபவ ரீதியாக மாந்தை மேற்கு விவசாய அமைப்பிடம் கையளிக்கப்பட்டது.
எனினும் குறித்த நெற் களஞ்சியம் மற்றும் அரிசி ஆலைக்கு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் இதரப் பொருட்களும் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த களஞ்சியம் மற்றும் அரிசி ஆலையினை மாந்தை மேற்கு விவசாய அமைப்பு 2011 ஆம் ஆண்டில் இருந்து சுமார் இரண்டு வருடங்கள் வரை இயக்கி வந்த நிலையில் கை விட்டுள்ளனர்.
இந்த நிலையில் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக 'காத்தான்குளம் நெற் களஞ்சியம் மற்றும் அரிசி ஆலை' எவ்வித செயற்பாடுகளும் இன்றி பாலடைந்த நிலையில் காணப்படுவதோடு, அன்றைய காலத்தில் செயல் பட்டு வந்த மாந்தை மேற்கு விவசாய அமைப்பு எவ்வித பராமறிப்பு மற்றும் கொடுக்கல் வாங்கள்களை உரிய முறையில் சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த நெற் களஞ்சியம் மற்றும் அரிசி ஆலை கடந்த 5 வருடங்களுக்கு மேலாக உரிய பராமறிப்பு இன்றி காணப்படுவதோடு,குறித்த ஆலையில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் தற்போது திருடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் இடம் பெற்று மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த நெற் களஞ்சியம் மற்றும் அரிசி ஆலை தொடர்பாக முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டது.
அதன் போது ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களினால் குறித்த பிரச்சினை தொடர்பில் குழு ஒன்றை அமைத்து விசாரனைகளை மேற்கொள்ளுமாறு மாந்தை மேற்கு பிரதேச் செயலாளருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த நியைலில் 15-08-2018 புதன் கிழமை மாலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் குறித்த ஆலைக்குச் சென்று பார்வையிட்டதோடு, பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடினார்.
உடனடியாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த மாந்தை மேற்கு விவசாய அமைப்பின் பிரதி நிதிகளை அழைத்து குறித்த விடையங்கள், அமைப்பினூடான கொடுக்கல் வாங்கல்கள் நிலுவை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளவுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை 2011 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த மாந்தை மேற்கு விவசாய அமைப்பினால் பல இலட்சம் ரூபாய் நிதி மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு விவசாய அமைப்பினால் கைவிடப்பட்ட காத்தான்குளம் நெற் களஞ்சியம் மற்றும் அரிசி ஆலை- பல இலட்சம் ரூபாய் மோசடி-படங்கள்
Reviewed by Author
on
August 16, 2018
Rating:

No comments:
Post a Comment