காணாமல் ஆக்கப்பபட்ட தாயக மக்களுக்காக லண்டனில் மாபெரும் கவனயீரப்பு போராட்டம்! -
ஆகஸ்ட் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகும். இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம் இன்று இடம்பெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் லண்டனில் புகழ்பெற்ற ரவல்கர் சதுக்கத்தில் நடைபெற்றது.
சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் இந்தப் பகுதியில் பொது கவனத்தையும் இப்போராட்டம் ஈர்த்தது மட்டுமல்லாமல், துண்டுப் பிரசுரங்கள் ஊடாக போராட்டத்தின் தேவையும் எடுத்துரைக்கப்பட்டது.
2009ம் ஆண்டு யுத்தத்தின் கடைசி நாட்களில் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாமல் வாழ்க்கையே போராட்டமாக எமது உறவுகள் தாயகத்தில் அல்லாடுகிறார்கள்.
நில அபகரிப்புக்கள், இராணுவ மயமாக்கல்கள், சிங்களக் குடியேற்றங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வாள்வெட்டுக் குழுக்கள் என திட்டமிட்டு தாயகம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சர்வதேச சமூகமும், ஐ.நாவும் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தது போல் இன்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழினம் ஈழத்தில் பல முன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் புலம்பெயர் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் முன் மிகப்பெரும் கடமை உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழின அழிப்பை உலகறியச் செய்வோம்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பபட்ட தாயக மக்களுக்காக லண்டனில் மாபெரும் கவனயீரப்பு போராட்டம்! -
Reviewed by Author
on
August 31, 2018
Rating:

No comments:
Post a Comment