தமிழனோட பேண்டை அவிழ்க்க பாக்கறாங்க: நடிகர் மன்சூர் அலிகான் காட்டம் -
தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்காக சமீபகாலமாக குரல் கொடுத்து வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான்.
சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் கூறுகையில், சேலம் எட்டு வழி சாலையை யார் கேட்டார்கள்? யாருக்கெல்லாம் இதனால் பயன் என அரசு தெளிவா சொல்ல வேண்டும். 10 ஆயிரம் கோடி வரும் என்பதால் இந்த சாலையை போடலாமா என கேள்வியெழுப்பியுள்ளார்.
பார்த்துட்டே இருங்க, தமிழன் முழிச்சிட்டிருக்கும்போதே அவன் பேண்ட்டையும் அவிழ்க்க பாக்கறாங்க.
தமிழன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா?
எதிர்க்கட்சியினர் ஏன் அமைதியா இருக்கிறார்கள்? இவ்வளவு எம்எல்ஏக்கள் இருந்தும் வாயே திறக்கவில்லை என்றால் எப்படி? அதுக்கும் காரணம் கமிஷன்தானா என கோபத்துடன் கேட்டுள்ளார்.
தமிழனோட பேண்டை அவிழ்க்க பாக்கறாங்க: நடிகர் மன்சூர் அலிகான் காட்டம் -
Reviewed by Author
on
August 06, 2018
Rating:

No comments:
Post a Comment