NEPL இன் முதல் கிண்ணத்தை வென்று வரலாற்று சாதனை படைத்த ரில்கோ கொங்கியூரஸ்! -
தெற்காசியாவில் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட NEPL தொடரின் இறுதிப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணியும் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய 4 அணிகளில் ஒன்றான ரில்கோ கொங்கிரஸ் அணியும் மோதியிருந்தன.
இந்த போட்டியை நேரில் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் குவிந்திருந்தனர்.
நடைபெற்று முடிந்த மாபெரும் இறுதிப்போட்டியில் மோதிய இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டியில் விறுவிறுப்பிற்கு குறைவிருக்கவில்லை.
லீக் சுற்றில் ரில்கோ கொங்கிரஸ் அணியை வெற்றி பெற்ற ஒரே ஒரு அணியாக கிளியூர் கிங்ஸ் அணி காணப்பட்டது.
அதே போல் முதலாது அரையிறுதியில் கிளியூர் கிங்ஸ் அணியை ரில்கோ கொங்கிரஸ் அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் ஒவ்வொரு முறை வெற்றி பெற்றிருந்தமையால் இறுதிப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பரவலாக காணப்பட்டது.
இந்த போட்டியில் ஆரம்பம் முதல் இரு அணிகளும் சமபலமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதலாவது கோலை ரில்கோ அணி சார்பாக தனேஸ் பதிவு செய்தார்.
தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணி சார்பாக வெளிநாட்டு வீரர் ஜொப் மைக்கல் பதிவு செய்தார்.
இரு அணிகளும் 1 : 1 என்ற கோல் கணக்கில் சமமாக இருந்தமையால் போட்டி பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது.
இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தனேஸ் தனது ரில்கோ கொங்கிரஸ் அணிக்காக இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
போட்டியின் முடிவில் ரில்கோ கொங்கிரஸ் அணி 02 : 01 என்ற கோல் கணக்கில் கிளியூர் கிங்ஸ் அணியை வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரில்கோ கொங்கிரஸ் சார்பில் இரண்டு கோல்களை பதிவு செய்த தனேஸ் தெரிவானார்.
தொடரின் சிறந்த கோல் காப்பாளராக ரில்கோ அணியின் கோல்காப்பாளர் தெரிவானார்.
NEPL இன் முதல் கிண்ணத்தை வென்று வரலாற்று சாதனை படைத்த ரில்கோ கொங்கியூரஸ்! -
Reviewed by Author
on
August 31, 2018
Rating:

No comments:
Post a Comment