இலங்கையில் சீன, இந்திய தொழிலாளர்களால் சர்ச்சை: வெளியில் செல்ல பயப்படும் பெண்கள் -
இலங்கையில் கட்டுமானப்பணிகளில் வேலை செய்யும் இந்திய மற்றும் சீனப்பிரஜைகளால் இலங்கைப் பிரஜைகள் பெரிதும் கஸ்டங்களை அனுபவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜகிரியவில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் வேலை செய்யும் சீன மற்றும் இந்திய தொழிலாளர்களால் அந்த பகுதி மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக ஊடகமொன்றிடம் அப்பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தெரிவிக்கையில்,
“வெளிநாட்டு தொழிலாளர்கள் காரணமாக மாலை 6.00 மணிக்குப் பின்னர் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது.
அவர்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் பாதையில் புகைக்கிறார்கள். அவர்கள் சரியான ஆடைகளை அணிந்திருக்கவில்லை. இந்த வீதியில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
எங்கள் வீடுகளிலிருந்து 6 மணிக்கு வெளியே செல்வதில்லை. எங்களுடைய வீடுகளில் இருந்து நாங்கள் வெளியேறுவது கடினம்.
மேலும், அவர்கள் இரவில் முச்சக்கர வண்டிகளில் பல்வேறு பெண்களை அழைத்து வருகிறார்கள். எங்கள் வீடுகளுக்கு முன் ஆணுறைகள் வீசப்பட்டுக்கிடக்கிறன.
எங்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் . அவர்கள் எங்கள் மகள்களை வீதியில் சந்திக்கும்போது வெளிப்படையாக பாலியல் ரீதியாக பேசுகிறார்கள்.
அதுமட்டுமின்றி, மது அருந்திவிட்டு எங்கள் மக்களை துன்புறுத்துகிறார்கள்” என்று அவர் கூறினார்.
ராஜகிரியவில் உள்ள இரண்டு கட்டுமான நிலையங்களில் இந்தத் தொழிலாளர்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது.
இலங்கையில் சீன, இந்திய தொழிலாளர்களால் சர்ச்சை: வெளியில் செல்ல பயப்படும் பெண்கள் -
Reviewed by Author
on
September 16, 2018
Rating:
Reviewed by Author
on
September 16, 2018
Rating:


No comments:
Post a Comment