விவாகரத்து செய்ய பெரிய அளவில் ஜீவனாம்சம் கொடுத்த பிரபலங்கள் -
ஹிர்த்திக் ரோஷன்
இந்தியாவின் கவர்ச்சிகரமான நடிகர் என்று புகழப்படும் ஹிர்த்திக் ரோஷன், தனது தோழியான சுசேனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், நடிகை கங்கனாவுடன் ஹிர்த்திக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி சுசேன் விவாகரத்து கோரியுள்ளார்.மேலும், தனக்கு ஜீவனாம்சமாக ரூ.400 கோடிகள் தர வேண்டும் என்று சுசேன் கோரினார். பின்னர், ரூ.380 கோடியை ஹிர்த்திக் ரோஷன் ஜீவனாம்சமாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

கரீஷ்மா கபூர்
நடிகையும், கரீனா கபூரின் சகோதரியுமான கரீஷ்மா கபூர், தனது கணவர் சஞ்சயை விவாகரத்து செய்த போது, குழந்தைகளுக்காக ரூ.14 கோடியும், மாதம் பத்து லட்ச ரூபாயும் ஜீவனாம்சமாக தர வேண்டும் என்றும் கோரியதாக கூறப்படுகிறது.பர்கான் அக்தர்
பர்கான் அக்தர் தனது மனைவி பிரிய, 10 ஆயிரம் சதுரடி கொண்ட பங்களாவை வழங்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் குழந்தைகள் வளர்ச்சிக்காக பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்று அவரது மனைவி கோரியதாகவும் அறியப்படுகிறது.ஆனால், விவாகரத்துக்கு பிறகு மனைவியிடம் பிள்ளைகள் வளர்ந்தாலும், தான் விரும்பும் போது பார்க்க அனுமதியும் பெற்றிருக்கிறார் பர்கான் அக்தர்.

அமீர்கான்
கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்த அமீர்கான், அவருக்கு ஜீவனாம்சமாக பெரிய அளவில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சயீப் அலிகான்
நடிகர் சயீப் அலிகான் தனது 13 ஆண்டுகால திருமண உறவை முறித்த போது, தனது மனைவி அம்ரிதாவிற்கு ஜீவனாம்சமாக 5 கோடி தர வேண்டும் என்று பேசப்பட்டது. ஆனால், சயீப் 2.5 கோடியை தான் அளித்துள்ளார்.அத்துடன், தனது மகன் 18 வயதை எட்டும் வரை மாதம் ஒரு லட்சம் தருவதாகவும் சயீப் ஒப்புக்கொண்டார். மேலும் விரைவில் மீது தொகையை தருவதாகவும், தனது குழந்தைகளுக்கு எப்போது வேண்டுமானலும் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சஞ்சய் தத்
நடிகர் சஞ்சய் தத் தனது இரண்டாவது மனைவி ரியா, ஜீவனாம்சமாக சஞ்சயிடம் இருந்து 8 கோடி ரூபாயும், ஆடம்பர கார் ஒன்றையும் பெற்றார்.பிரபு தேவா
நடன இயக்குநரும், நடிகர் மற்றும் இயக்குநருமான பிரபு தேவா, தனது மனைவியை விவாகரத்து செய்ய 10 லட்சம் ரொக்கமும், 25 கோடி மதிப்பிலான சொத்தையும் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.லியாண்டர் பயஸ்
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான லியாண்டர் பெயஸ் தனது மனைவி ரியாவை பிரிந்தார். பின்னர், மாதம் மூன்று லட்சம் ரூபாய் மற்றும் மகளின் படிப்புக்கு 90 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று ரியா கோரியிருந்தார்.
விவாகரத்து செய்ய பெரிய அளவில் ஜீவனாம்சம் கொடுத்த பிரபலங்கள் -
Reviewed by Author
on
September 30, 2018
Rating:
No comments:
Post a Comment