நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள் -
இதன் அறிகுறியாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாகம் மற்றும் பசி எடுப்பது, மிக விரைவில் எடை குறைவது, கண் பார்வை மங்குதல், காயங்கள் குணமாடைய தாமதம் அடைவது போன்றவை தென்படும்.
எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த காய்கறிகளை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போம்.
பாகற்காய்
பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.
வெந்தயக் கீரை
கீரை வகைகளில் வெந்தயக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. இந்தக் கீரையில் உள்ள லேசான கசப்பு சுவை, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைத்து நீரிழிவை குணமாக்க உதவுகிறது.வெண்டைக்காய்
இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாகக் கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், அதை வெறும் வயிற்றில் குடித்தால் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும்.
சுரைக்காய்
சுரைக்காயின் சாறு எடுத்து அதை தொடர்ந்து காலையில் குடித்து வர இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவு நோய் விரைவில் சரியாகும்.பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. எனவே இதனை நீரிழிவு நோயின் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
காலிஃப்ளவர்
காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. எனவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு நோய் விரைவில் குணமாகும்.பூசணிக்காய்
பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்றாலும் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறிகளின் ஒன்றாகும்.
பிரெஞ்சு பீன்ஸ்
பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், நம் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும். எனவெ இதனை நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவை தடுக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள் -
Reviewed by Author
on
September 30, 2018
Rating:
No comments:
Post a Comment