பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தண்ணீரில் கரைந்து விடும் வகையில் பிரத்யேக பையை சீனா தயாரித்துள்ளது
பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவதைத் தடுக்க, தண்ணீரில் கரைந்து விடும் வகையில் பிரத்யேக பையை சீனா தயாரித்துள்ளது.
உலகம் முழுவதும் பொதுமக்கள், அனைத்து வகைகளிலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல தேங்கி சுற்றுச்சூழலை அச்சுறுத்தி வருகின்றன. பிளாஸ்டிக்கை அன்றாடம் பயன்படுத்தி வந்த மக்கள், அதை தவிர்க்க வேண்டுமென அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றை சீனாவின் குவாங்ஜோவ் (Guangzhou ) பல்கலைக்கழக வல்லுநர்கள் தயாரித்துள்ளனர்.
பிளாஸ்டிக் போலவே உள்ள இந்த பையை, அனைத்து வகையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். பயன்பாடு முடிந்த பிறகு, இந்த பையை தண்ணீரில் கரைத்து விட முடியும். மக்காச்சோளம் போன்றவற்றின் மாவில் இந்தப் பை தயாரிக்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தண்ணீரில் கரைந்து விடும் வகையில் பிரத்யேக பையை சீனா தயாரித்துள்ளது
Reviewed by Author
on
September 10, 2018
Rating:
Reviewed by Author
on
September 10, 2018
Rating:


No comments:
Post a Comment