வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதியினர்! காரணம் என்ன? -
வவுனியாவில் இளம் தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த தம்பதியினர் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த கடிதத்தில் தமது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரும், 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. 25 வயதுடைய நந்தகுமார் மற்றும் 19 வயதுடைய கெளதமி ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டனர்.
வவுனியா, கனகராயன் குளத்தை சேர்ந்த இவ்விருவரும் பரிசங்குளத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும், கணவன் மனைவிக்கு அருகே சடலமாகவும் நேற்று மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதியினர்! காரணம் என்ன? -
Reviewed by Author
on
September 10, 2018
Rating:

No comments:
Post a Comment