உலகின் முழுவதையும் தாக்க வரும் பிரம்மாண்ட சுனாமி
முக்கிய நகரங்களை அழிக்கும் வகையில் சுனாமி உருவாகும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் விர்ஜீனியா தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் ஆய்வு ஒன்றில் ஈடுபட்டனர். அதன்படி தென் சீனக்கடல் பகுதியில் மணிலவில் தொடங்கி உலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த அளவு மேலும் உயர்ந்து வருவதால் 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதன்மூலம் சுனாமி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பருவநிலை மாற்றம் காரணமாக கூறப்படுகிறது. இந்த சுனாமி மணிலாவில் தொடங்கி தைவான் வழியாக உலகம் முழுவதும் தாக்கி அழிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் முழுவதையும் தாக்க வரும் பிரம்மாண்ட சுனாமி
Reviewed by Author
on
September 09, 2018
Rating:

No comments:
Post a Comment