அண்மைய செய்திகள்

recent
-

மர்மமான முறையில் உயிரிழந்த போதநாயகி! கொலையாளி கணவனா? தாயார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

மர்மான நிலையில் உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மரணம் தற்கொலையா அல்லது திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டரா என்பது தொடர்பில் சிக்கல் நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் உயிரிழந்த தனது மகளை, அவரது கணவரான செந்தூரன் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தி வந்ததாக தாயார் தெரிவித்துள்ளார்.
பேதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தன. அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு உட்பட்டிருந்தார்.
இவர் மரணம் தொடர்பாக கேள்வியுற்று அதிர்ச்சி அடையாமல் சதாரணமாக திருகோணமலைக்கு வந்தார். சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என்று முரண்பட்டு இறுதி கிரியைக்கு கூட வரவில்லை எனத் தெரிவித்தார்.
போதநாயகியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை வேண்டும் என கோரி கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்திலிருந்து பிரதான வாயில் வரை ஊர்வலமாக வந்த இப் போராட்டத்தில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
போதநாயகியின் மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அல்லது கொலையாயின் கொலைக்கு காரணம் என்ன? யாரால் கொலை செய்யப்பட்டார் என கண்டுபிடிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

மர்மமான முறையில் உயிரிழந்த போதநாயகி! கொலையாளி கணவனா? தாயார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் Reviewed by Author on September 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.