காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள கருத்து -
இலங்கையின் போரின் போது காணாமல் போனோரின் உறவினர்கள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக நீண்டகாலமாக காத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
ஐக்கிய நாடுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான குழு இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் குழுவின் ஆண்டறிக்கையில் இந்தக்கருத்து வெளியாகியுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் நடவடிக்கைகளையும் அமுல்படுத்தலையும் இலங்கை அரசாங்கம் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை அதற்கு சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டிய கடமையுள்ளது
காணாமல்போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 116வது அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
இதன்போது 46 நாடுகளின் 840 விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள கருத்து -
Reviewed by Author
on
September 09, 2018
Rating:

No comments:
Post a Comment