அண்மைய செய்திகள்

recent
-

அம்மைத் தழும்புகளுடன் 150 ஆண்டுகள் பழமையான கருப்பினப்பெண்ணின் மம்மி: சுவாரஸ்ய கண்டுபிடிப்பு -


நியூயார்க்கில் கிடைத்த 150 ஆண்டுகள் பழமையான கருப்பினப்பெண்ணின் மம்மியின் அடையாளம் தெரியவந்துள்ளது.
கட்டிட வேலை ஒன்றிற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த சிலர் ஒரு பெண்ணின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்து அது கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உடலாக இருக்கலாம் என்று எண்ணி பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த பொலிசார் அந்த உடலைக் கைப்பற்றி, பள்ளம் தோண்டும்போது கிடைத்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் என பதிவு செய்தனர்.

பின்னர் அந்த உடலை தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்தபோது அவர்களுக்கு வரிசையாக பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.
அது சிவில் யுத்தத்திற்கு முன், பெரியம்மை நோயால் உயிரிழந்த ஒரு பெண்ணின் உடல் என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
அந்தப் பெண்ணின் பெயர் Martha Peterson என்பதும் ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவள் என்பதும், 150 ஆண்டுகளுக்கு முன் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்த அவள் ஒரு இரும்பு சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்கப்பட்டதும், அவள் இறப்பதற்குமுன் அதே இரும்பு சவப்பெட்டி செய்பவர்களிடம் வேலை செய்ததும் தெரியவந்தது.

26 வயதாகும்போது பெரியம்மை நோயால் உயிரிழந்த அவள் புதைக்கப்பட்ட இரும்பு சவப்பெட்டியின் உறுதித்தன்மையால் இன்னும் அவளது உடலில் பெரியம்மை நோயின் தழும்புகள் காணப்படுவது கண்டு தடயவியலாளர்கள் வியப்படைந்தனர்.
அப்படியென்றால் அந்த பெரியம்மை நோயை உண்டாக்கிய வைரஸ் உயிருடன் இருக்குமோ என்ற அச்சம் எழ, நல்ல வேளையாக அறிவியலாளர்கள் ஆய்வு செய்தபோது அந்த வைரஸ் இறந்திருந்ததைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.




அம்மைத் தழும்புகளுடன் 150 ஆண்டுகள் பழமையான கருப்பினப்பெண்ணின் மம்மி: சுவாரஸ்ய கண்டுபிடிப்பு - Reviewed by Author on October 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.