மன்னாரில் காலபோக நெற்செய்கைக்கு 24-10-2018 முதல் கட்டுக்கரைக்குளத்தின் நீர் திறந்து விடப்படுகிறது.
மன்னார் பிரதான கட்டுக்கரைக்குளத்தில் போதிய நீர் இருப்பதால் (24.10.2018) முதல் 2018/2019 ஆண்டுக்கான காலபோக நெற்செய்கைக்காக கட்டுக்கரைக்குளத்திலிருந்து நீர் திறந்து விடப்படுகின்றது என காலபோக நெற்செய்கை சம்பந்தமான விவசாயிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பிரதான குளமாகிய கட்டுக்கரைக் குளத்தின் கீழ் 2018/2019 ஆண்டுக்கான காலபோகம் விவசாயம் செய்வதன் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்C.A.மோகன்ராஸ் தலைமையில் திங்கள் கிழமை (22.10.2018) உயிலங்குளம் கட்டுக்கரைக்குள விவசாயிகளின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்டுக்கரைக்குளம் அமைப்பின் பிரதிநிதிகள், நீர்பாசன எந்திரிகள், கமத்தொழில் திணைக்கள அதிகாரிகள் உட்பட விவசாயிகள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நெற்செய்கை செய்ய வேண்டிய காலம், எந்த இன நெல் விதைப்பு செய்யப்படல் வேண்டும், நெற் செய்கைக்கான தண்ணீர் கட்டுக்கரைக்குளத்திலிருந்து திறந்து விடப்படும் காலங்கள் போன்ற முக்கிய விடயங்கள் ஆராய்பட்டு இதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
வழமைபோன்று மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் 24438 ஏக்கர் நெற்செய்கைக்கான நிலங்கள் காணப்படுவதால் இவை அனைத்திலும் நெற்செய்கைப்பண்ணுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தற்பொழுது மன்னார் பிரதான குளமாகிய கட்டுக்கரைக் குளத்தில் 9.4 அடி தண்ணீர் காணப்படுவதால் நெற்செய்கைக்காக இன்று புதன் கிழமை (24.10.2018) முதல் தண்ணீர் திறந்து விடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்முறை நெற்செய்கையானது 2, 21/2, 3, 31/2 மாத நெற்செய்கையே மேற்கொள்ள வேண்டும் எனவும், 2, 21/2 மாத நெற் செய்கையின் இறுதி நாள் 30.11.2018 அன்றும் 3, 31/2 மாத நெற் செய்கையின் இறுதி நாள் 13.11.2018 ஆக இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கான காப்புறுதி செய்யப்படும் கடைசி நாட்களாக பயிர் செய்யப்படும் கடைசி நாட்களே இறுதி நாளாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
2018 சிறுபோக நெற் செய்கையினால் காலதாமதமாகும் வாய்க்கால்களுக்கு 2018/19 பெரும்போக தண்ணீர் விநியோகத்தை காலதாமதமாகும் காலத்துக்கேற்றவாறு நீடித்து வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Reviewed by Author
on
October 28, 2018
Rating:

No comments:
Post a Comment