புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு-தமிழமுது நண்பர்கள் வட்டம்---படங்கள்
நண்பர்கள் வட்டம் அமைப்பின் 2ஆம் வருட நிறைவு விழாவும் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மடு மற்றும் மன்னார் வலைய மாணவமாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கல்வியாளர் கௌரவிப்பு நிகழ்வும் 26-10-2018 மாலை 3 மணிக்கு மன்.அடம்பன் RCTMS பாடசாலையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக திருவாளர் S.கேதீஸ்வரன் செயலாளர் மாந்தை மேற்கு
விருந்தினர்களாக - அருட்பணி T.நவரெட்ணம் பங்குத்தந்தை அடம்பன்
- சிவஸ்ரீ T.கருணானந்தக்குருக்கள் திருக்கேதீஸ்வரம்
- அப்துல் ரவூப் தஸ்னீம் மொகைதீன் ஜும்மா மசூதி-அடம்பன்
கௌரவம் பெறும் அதிதிகளாக
- திருமதி.S.சுகந்தி செபஸ்ரியன் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர்
- திருமதி லூட்ஸ் மாலினி வெனிற்றன் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர்
- அருட்சகோதரர் J.ஸ்ரனிஸ்லாஸ் முன்னாள் புனித பற்றிமா மத்திய மகா வித்தியாலயம் பேசாலை இவர்களுடன் மாணவமாணவிகள் ஆசிரியர்கள் அதிபர்கள் கல்வித்திணைக்கள அதிகாரிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
கருங்கண்டல் RCTMVபாடசாலை மற்றும் மன்.அடம்பன் RCTMS பாடசாலை மாணவர்களின் கண்கவரும் நடனத்துடன் மன்னார் மாவட்ட ரீதியில் முதல் 11 இடங்களைப்பபெற்ற மாணவமாணவிகளுக்கான கல்விழி விருதும் சான்றிதழும் பரிசும் கலந்து கொண்ட விருந்தினர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர் அத்தோடு நீண்ட காலமாக கல்விச்சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ள கல்வியாளர்களான
- திருமதி.S.சுகந்தி செபஸ்ரியன் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர்
- திருமதி லூட்ஸ் மாலினி வெனிற்றன் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர்
- அருட்சகோதரர் J.ஸ்ரனிஸ்லாஸ் முன்னாள் புனித பற்றிமா மத்திய மகா வித்தியாலயம் பேசாலை சேவையினைப்பாராட்டி கல்விச்செம்மல் எனும் விருதுடன் பொன்னாடை போர்த்தி சந்தனமாலை அணிவித்து விசேட விதமாக பெற்றோர் ஆசிரியர் விருந்தினர்கள் கௌரவித்தனர். அத்துடன் வெட்டுப்புள்ளியிற்கு மேல் பெற்ற 130 மாணவர்களுக்கும் சான்றிதழும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மன்னார் மண்ணில் இம்முறை கிராமப்புறப்பாடசாலைகள் 1-2-3 இடங்களைப்டபெற்று தமது திறமையினை வெளிப்படுத்தியுள்ளனர் அவர்களை அவர்கள்pன் இடத்திற்கே வந்து தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினர் கௌரவப்படுத்தி வெளிப்படுத்தும் நிகழ்வு பாராட்டுக்குரியது. கல்வியால் மட்டும் தான் நாம் எமது எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பொன்னான வாக்கை நாம் மறந்துவிடக்கூடாது மாணவர்களையும் கல்வியாளர்களையும் சரியான தருணத்தில் சரியான நேரத்தில் தட்டிக்கொடுத்தும் பாராட்டியும் கௌரவிக்கவும் வேண்டும்.
அப்போதுதான் நாம் வாழ்வு அர்த்தமுள்ளதாக அமையும் இரண்டாவது தடவையாகவும் இவ்வாறான அரிய பெரிய நல்ல செயலை செயல் வடிவமாக்கிக்கொண்டு இருக்கும் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினருக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்…. நிகழ்ச்சித்தொகுப்பினை S.அருள்நேசன் ஆசிரிய வளவாளர் சிறப்பாக வழங்கினார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு-தமிழமுது நண்பர்கள் வட்டம்---படங்கள்
Reviewed by Author
on
October 28, 2018
Rating:

No comments:
Post a Comment