டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்....
டெஸ்ட் போட்டிகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் முன்னணி வீரர்கள் பலர் டெஸ்ட் போட்டி தான் ஒரு வீரரை நிலையான கிரிக்கெட்டரை உருவாக்கும், டெஸ்ட் போட்டியை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒருநாள் போட்டிகள் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 10 வீரர்களின் பட்டியலை பார்த்தோம். இன்று டெஸ்ட் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருந்து பெற்ற டாப் 5 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்
குமார் சங்ககாரா(5)
இலங்கை அணியின் ஜாம்பாவன்களில் ஒருவரான குமார் சங்ககாரா தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின மூலம் 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அசத்தி வந்துள்ளார்.கடந்த 2000-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், அதன் பின் கீப்பிங், துடுப்பாட்டம் என அசத்தி வந்தார்.
134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 16 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.
ஷேன் வார்னே(4)
அவுஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் தான் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. இவரது பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு எதிரணி வீரர்கள் திணறுவர். இவர் 145 ஒருநாள் போட்டிகளில் 17 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.வாசிக் அக்ரம்(3)
பாகிஸ்தான் அணியில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பந்து வீச்சாளர்கள் வாசிம் அக்ரமும் ஒருவர். தன்னுடைய அசத்தலான ஸ்விங் மூலம் துடுப்பாட்ட வீரர்களை கதிகலங்க வைப்பார். வெறும் 104 போட்டிகள் விளையாடியுள்ள வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.இவர் 17 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.
முத்தையா முரளிதரன்(2)
இலங்கை அணிக்கு கிடைத்த ஒரு சொத்து என்று கூட இவரைக் கூறலாம், இவர் பந்து வீச வந்துவிட்டாலே எதிரணி வீரர்கள் மிரளுவார்கள். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.134 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 19 முறை ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார்.
ஜாக் காலிஸ்(1)
தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் மட்டுமின்றி கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக இருந்தவர் தான் காலிஸ். போட்டியை தன்னுடைய பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் மூலம் மாற்றும் திறமை கொண்ட இவர், தென் ஆப்பிரிக்கா அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.166 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 23 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்....
 Reviewed by Author
        on 
        
October 13, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 13, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 13, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 13, 2018
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment