எகிப்து இளவரசிகளின் சொக்க வைக்கும் அழகிற்கு இதுதான் காரணமாம் -
எகிப்தில் இருந்த ராஜாக்கள் மற்றும் ராணிகள் உலகிலேயே வியக்க தக்க அழகுடன் இருந்ததாக வரலாறுகள் சொல்கிறது.
மேலும் எகிப்து ராணிகள் அழகில் திளைக்க முக்கிய காரணமாக இருந்த சில அழகு இரகசியங்களைப் பற்றி பார்ப்போம்.
கூந்தல் அழகிற்கு
எகிப்தியர்கள் கூந்தலை பொலிவு பெற செய்ய எந்த வித செயற்கை பொருளும் சேர்க்காத தேங்காய் வெண்ணெயை அவர்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.முக பருக்களுக்கு
முகத்தில் உள்ள பருக்களைப் போக்க வெந்தய விதைகளை அரைத்து போட்டு கொண்டால் விரைவில் மறைந்து விடுமாம்.சிவந்த உதடு
ரெட் அச்ரே என்ற ஒன்று களிமண்ணில் கிடைக்க கூடிய மூல பொருளாம். இதனை பயன்படுத்தி தான் எகிப்திய ராணிகள் அவர்களின் உதடுகளை அழகு செய்து கொள்ளவார்களாம்.அழகை மேம்படுத்த
எகிப்தியர்கள் அவர்களின் அழகை மேம்படுத்த கழுத்தை பாலில் முதலை சாணத்தை கலந்து அவர்கள் தங்களது அழகை மேம்படுத்த உபயோகித்தனர். இது சற்றே அருவருக்கதக்க விஷயமாகவே மற்றவர்களால் பார்க்க படுகிறது.கை அழகிற்கு
நகங்களை அழகு செய்ய மருதாணி மற்றும் பாதாம் எண்ணெய் பயன்படுத்தினார்கள். மேலும் இவை இரண்டும் அவர்களின் தோலில் எந்த வித நோய்களும் ஏற்படாமல் பார்த்து கொள்ளுமாம்.சருமத்தின் பாதுகாக்க
சருமத்தின் பாதுகாப்பை அதிகரிக்க கற்றாழை நன்கு பயன்படும். மேலும் கற்றாழை ஜெல்லை மட்டும் முகத்தில் பூசி அழகு படுத்தி வந்தனர். மேலும், இதை உட்கொள்ளும் பழக்கமும் அவர்களிடம் இருந்ததாம்.வாசனை திரவியங்கள்
உடலில் வாசனை மண மணக்க எகிப்தியர்கள் லாவெண்டர், ரோஸ்மேரி, சிடார் போன்ற பூக்களை கொண்டு வாசனை திரவியம் செய்து அதனை உடலில் அடித்து கொண்டனர்.பாலும் தேனும்
குளியலுக்கு தேனையும் பாலையும் கலந்து குளிப்பார்களாம். மேலும் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்கி, உடலை சுத்தமாக வைத்து கொள்ளும். மேலும், இளமையான தோற்றத்தையும் இந்த குளியல் தரும்.இளமையாக இருக்க
இளமையை அப்படியே பாதுகாக்க எகிப்தியர்கள் பாதாமை பயன்படுத்தினர். பாதாம் எண்ணெய்யை சருமத்தில் பூசி மசாஜ் செய்வதால் மென்மையான சருமம் பெறலாம்.காபி ஸ்க்ரப்
காபி தூள், தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து உடலில் தடவி வந்தால், சருமம் அழகு பெறுமாம். உடல் முழுக்க மொழு மொழுவென வைத்து கொள்ள இந்த எளிமையான முறையை அவர்கள் கடைபிடித்து வந்தனர்.
எகிப்து இளவரசிகளின் சொக்க வைக்கும் அழகிற்கு இதுதான் காரணமாம் -
Reviewed by Author
on
October 01, 2018
Rating:

No comments:
Post a Comment