வடமாகண மகளிர் அமைச்சுக்கு ஒரு சதமும் ஒதுக்காத இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் இத்தனை மில்லியன்கள்
வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய தொழில் அமைப்புக்கு இரண்டு லட்சம் பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் சுய தொழில் உற்பதிகளில் ஈடுபட்டுவரும் பெண்களுக்கான சுய தொழில் உபகாரணங்கள் வழங்கும் நிகழ்வானது மன்னார் பிரதேச சமூக சேவை உத்தியோகஸ்தர் தலைமையில் இன்று காலை இடம் பெற்றது குறித்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குறித்த நிகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
வடமாகணமானது முற்றுமுழுதாக போரினால் பாதிக்கப்பட்ட மாகாணமாக இருக்கின்ற பொழுது இன்றுவரை வடமாகண மகளீர் அமைச்சுக்கு ஒரு சதமும் ஒதுக்காத இலங்கை அரசாங்கம் இந்த வருட பட்ஜட்டில் 3000 ஆயிரம்; மில்லியனை பாதுகாப்பிற்கு ஒதுக்கியுள்ளது
தான் வழிந்து தொடுத்த யுத்ததில் ஒரு இனத்தையே இனவழிப்புக்கு உள்ளாக்கி விட்டு அதில் பாதிக்கப்பட்ட பெண்களை மீள் எழுச்சி அடையவிடாமல் தடுத்து அவர்களுக்குறிய எந்த உதவியையும் செய்யாமல் இப்போது பாதுகாப்புக்கென 3000 ஆயிரம் மில்லியன் ஒதுக்கியிருப்பது வழமை பேன்றே ஒரு அதிகரித்த தொகையாகவே நாம் பார்கின்றோம்
ஒன்பது வருடம் யுத்தம் முடிந்த பின்பு இந்த அரசாங்கம் எந்த நாட்டுடன் யுத்தம் நடத்துவதற்காக இந்த 3000 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியிருக்கின்றது என்பது எங்களுடைய மக்கள் எழுப்புகின்ற கேள்வியாகதான் இருக்கின்றது
மீள் எழுச்சியை மக்களுக்கு ஏற்படுத்தாது இரானுவத்திற்கும் படைபலத்தை அதிகரிப்பதற்கும் ஒதுக்கும் பொழுது பாரளுமன்றத்தில் எங்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கின்றவர்கள் இந்த வரவுசெலவு திட்டத்தை ஆதரிக்க போகின்றார்களா இல்லை இதய சுத்தியுடன் எங்களுடைய மக்களை போரில் இருந்து மீண்டொழுகின்ற நிலைக்கு கொண்டுவர போகின்றார்களா என்று மக்கள் தான் வினவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


வடமாகண மகளிர் அமைச்சுக்கு ஒரு சதமும் ஒதுக்காத இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் இத்தனை மில்லியன்கள்
Reviewed by Author
on
October 12, 2018
Rating:

No comments:
Post a Comment