மன்னார் நானாட்டானில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ...
தேசிய மரநடுகை நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக கடந்த ஐந்தாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் அதன்தொடர் நிகழ்வாக ஐயாயிரம் மரக் கன்றுகளை நானாட்டான் பிரதேசக் கிராமங்களில் நடும் நிகழ்வை மன்னார் மாவட்ட அரச செயலர் C.A.மோகன்றாஸ் அவர்கள் இன்று காலை 9-30 மணியளவில் மரக்கன்றினை நடவு செய்து ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் நானாட்டான் பிரதேச செயாளர் மா.சிறிஸ்கந்தகுமார் கிராமசேவகர் R.R.நொனாய் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் கிராமங்கள் தோறும் நடுவதற்கான மரக்கன்றுகளை மாதர் கிராம அபிவிருத்திசங்க உறுப்பினர்களிடம் C.A.மோகன்றாஸ் அவர்கள் வழங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் நானாட்டானில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ...
Reviewed by Author
on
October 12, 2018
Rating:

No comments:
Post a Comment