ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான பொறிமுறை பொதுவாக்கெடுப்பு! -
கனடாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக - அரசியல் ஆர்வலர்கள் ஆகியோருடன் கருத்துப்பரிமாற்றக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதில், தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
பொதுவாக்கெடுப்பு நோக்கிய செயற்திட்டத்துக்கான கருத்துருவாக்கத்தினை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் ஈழத்தமிழ் மக்களிடத்தில் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை உள்ளது.
தனி நாட்டு பொது வாக்கெடுப்புக்கான கருத்துருவாக்கம் கத்தலோனிய மக்களிடம் விதைக்கப்பட்டமையால் தான் ஸ்பெயின் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் பொது வாக்கெடுப்பினை வெற்றிகரமாக சமீபத்தில் நடாத்தியிருந்தார்கள்.
பொது வாக்கெடுப்பு என்ற பொறிமுறையை நோக்கி கத்தலோனிய மக்கள், மத்திய ஸ்பெயின் நாட்டுக்கு எதிராக அமைதி வழியில் போராடிக் கொண்டே இருக்கின்றனர்.
ஈழத் தமிழர்களுக்கும் தமது சுயநிர்ணய அடிப்படையில் தமது தேசத்தை வென்றெடுக்க 'yes to Referendum' செயற்பாடும் உறுதிப்பாடும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
எனவே பொது வாக்கெடுப்பு என்ற கருத்தை மக்களிடம் எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் முன்வந்து இடைவிடாது பரப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை, தமிழர் தாயகத்தின் மீதான சிங்களக்குடியேற்றங்கள், இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான செயற்பாடுகள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான பொறிமுறை பொதுவாக்கெடுப்பு! -
Reviewed by Author
on
October 09, 2018
Rating:

No comments:
Post a Comment