மூளைக்கும், குடலுக்குமிடையே எவ்வாறு தகவல் பரிமாற்றம்
நீங்கள் முன்னரெப்போதாவது கருத்தரங்குகளுக்கு முன்னர் குமட்டல் வருவது போன்ற உணர்வை அனுபவித்திருப்பீர்கள்.
அல்லது, கண்டபடி உணவருந்திவிட்டு மயக்க நிலைக்கு ஆளாகியிருப்பீர்கள்.
அப்படியென்றால் உங்களால் குடலுக்கும் மூளைக்குமிடையே உள்ள தொடர்பை விளங்கிக்கொள்ள முடியும்.
முன்னர் மூளைக்கும், குடலுக்குமிடையிலான தொடர்பு குருதியிலுள்ள ஓமோன்களினாலேயே மறைமுகமாக ஏற்படுத்தப்படுவதாக விஞ்ஞானிகள் நமிபியிருந்தனர்.
ஆனால் தற்போது இத் தொடர்பாடல் வழிகள் நேரடியானதும், ஓமோன்களிலும் விரைவானதுமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எலிகளில் ரேபிஸ் வைரஸினைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் குடலிலிருந்து மூளைக்குக் கடத்தப்படும் சமிக்ஞையை பின்தொடர்ந்திருந்தனர்.
இதன்போது கடத்தப்படும் சமிக்ஞையானத ஒரு தனி நரம்பிணைப்பை 100 மில்லிசெக்கனில் கடப்பதைக் கண்ட விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்திருந்தனர்.
இக் கணத்தாக்கக் கடத்தல் வேகமானத கண் சிமிட்டுவதிலும் அதிகம்.
எலிகளில் பச்சை ஒளிர்வுடைய ரேபிஸ் வைரைசைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையொத்த செயற்பாடே மனிதர்களிலும் நடைறுவதாக ஆய்வாளர்கள் தெருவிக்கின்றனர்.
மூளைக்கும், குடலுக்குமிடையே எவ்வாறு தகவல் பரிமாற்றம்
Reviewed by Author
on
October 09, 2018
Rating:

No comments:
Post a Comment