மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதை அமைந்துள்ள பகுதி பற்றைக்குள் இருந்து வெடி பொருட்கள் மீட்பு-(படம்)
மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதை அமைந்துள்ள பகுதியில் காணப்பட்டுள்ள பற்றைக்குள் இருந்து 18-10-2018 வியாழக்கிழமை மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
-குறித்த பகுதியில் உள்ள பற்றைக்குள் ஒரு தொகுதி வெடி பொருட்கள் காணப்பட்டதை அவதானித்த விமானப்படை வீரர்கள் உடனடியாக பொலிஸார் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
-இந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருட்களை மீட்பதற்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டது.
விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் விமானப்படை வீரர்கள் இணைந்து குறித்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.
இதன் போது ஆட்லரி குண்டுகள் -04,சிஸ்ரி மோட்டார் வெடி குண்டு-01, பயூஸ்-04,கைக்கண்டு-01,சிறிய ரக குண்டு-01 ஆகியன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
-மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயழிலக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதை அமைந்துள்ள பகுதி பற்றைக்குள் இருந்து வெடி பொருட்கள் மீட்பு-(படம்)
Reviewed by Author
on
October 19, 2018
Rating:
Reviewed by Author
on
October 19, 2018
Rating:


No comments:
Post a Comment