மன்னாரில் மழையினால் மக்களும் மாணவர்களும் பாதிப்பு .....
மன்னாரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையினால் மக்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்பு வறட்ச்சி தாண்டவமாடி
நீண்ட நாட்களுக்கு பின் மழைபெய்கின்றபோது விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் பயிர்ச்செய்கைக்கு தாயாராகுன்றனர் ஆனாலும்
நகரப்பகுதியினை அண்டிய கிராமங்களான ஜிம்றோன் நகர் ஜீவபுரம் சாந்திபுரம் சௌத்பார் எழுத்தூர் இருதயபுரம் எமில்நகர் பனங்கட்டுகொட்டு பெரியகடை போன்ற பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கிநிற்பதாலும் பாதைகள் சேறும் சகதியுமாக இருப்பதாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள்.
குறிப்பாக மணவமாணவிகள் காலணிகள் அணியாமல் சீருடைகள் நனைந்தவாறு பாடசாலைக்கு செல்லுகின்றனர்.
இன்னும் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக காற்றும் மழையும் மாறிமாறி மழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது எனவே கடற்றோழில் செல்வோர் மற்றும் கடற்கரையோரத்தில் குடியிருப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.பிள்ளைகளின் மீது விளையாடும் போதும் பயணிக்கும் போதும் அவதானமாய் இருங்கள்..
- வாய்க்கால்களில் கொட்டப்பட்ட குப்பைகளால் நீர் தேங்கி நிற்கின்றது.
- பொருத்தமற்ற இடங்களில் கொட்டபடும் குப்பைகள்
- துப்பரவுப்பணியாளர்களால் அகற்ரப்படாமல் இருக்கும் குப்பைகள்
அடைபட்டு கிடக்கும் வாய்க்கால் மற்றும் தற்போது வெட்டப்படவேண்டிய சிறிய வாய்க்கால்களை உடனடியாக வெட்டி மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
"சுகாதாரம் பேணுவோம் வரும் முன் காப்போம்"
மன்னாரில் மழையினால் மக்களும் மாணவர்களும் பாதிப்பு .....
Reviewed by Author
on
October 09, 2018
Rating:

No comments:
Post a Comment