பாரக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல்:
குறித்த வெடிகுண்டு பார்சல்களை கண்டுபிடித்த புலனாய்வு அதிகாரிகள் அதை செயலிழக்கச் செய்துள்ளனர்.
ஆனால், இந்த வெடிகுண்டு பார்சலை ஒபாமா, மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பிரித்துப் பார்க்கவில்லை.
மேலும் குறித்த வெடிகுண்டு பார்சலானது தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் எதிரணியினரை மட்டுமே குறிவைத்து அனுப்பப்பட்டுள்ளது புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க ரகசிய கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவலில், இந்த பார்சல்களை ஒபாமா மற்றும் கிளிண்டனிடம் கொண்டு சேர்க்கும் முன், வழக்கமான சோதனையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அப்போது, இரு பார்சல்களிலும் சந்தேகத்துக்கு இடமான வெடிபொருட்கள் இருப்பதைக் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மட்டுமின்றி அந்த பார்சலில் இருந்த மர்ம வெடிபொருட்கள் செயலிழப்பு செய்யப்பட்டது. அந்த பார்சலில் வெடிபொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படும் பவுடர், மற்றும் வெடிபொருட்கள் இருந்தன.

இந்தப் பொருட்களை ஒபாமா, ஹிலாரி ஆகியோர் பிரித்துப் பார்த்திருந்தால், விபரீதம் ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவின் கோடீஸ்வரரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான ஜார்ஜ் சோராஸ் வீட்டுக்கும் இதுபோன்ற பார்சல் வந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த 3 பார்சல்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





பாரக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல்:
Reviewed by Author
on
October 25, 2018
Rating:
No comments:
Post a Comment