அண்மைய செய்திகள்

recent
-

அனுராதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துகளில் 140 இதுவரை பலியாகியுள்ளனர் -


அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் பிரிவில் இது வரை இடம்பெற்றுள்ள விபத்துகளில் 140 பேர் உயிரிழந்துள்ளதாக வலய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கருணாரத்தின இன்று தெரிவித்துள்ளார்.

விபத்துகள் தொடர்பாக தொடர்பு கொண்டு போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார். வலயத்தின் 23 பொலிஸ் நிலையகளிலுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுள்ள விபத்துகளிலேயே இத்தொகையினர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைவாக அனுராதபுரம் 19, மிஹிந்தலையில் 12, ஹிதோகமயில் 1, தமுத்தேகமவில் 14, தலாவயில் 4, ராஜங்கனையில் 6, எப்பாவளவில் 5, கல்னேவயில் 5, நொச்சியாகமயில் 7, கல்கிரியாகமவில் 2, கெகிராவயில் 15, திறப்பனை 5, மதவாச்சி 4, கெப்பித்திகொள்ளாவ 6, பதவிய 2, கஹடகஸ்திகிலிய 10, ஹொரவப்பொத்தானை 4, கலன்பிந்துனுவெவ 5, தந்திரிமலை 3, விளச்சிய 3, இபலோகம 3, பரசன்கஸ்வெவ 3, மொறகொட 2, என்ற கணக்கில் உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரம் மற்றும் கெகிராவ, தமுத்தேகம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே கூடுதலான விபத்துகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துகளில் 140 இதுவரை பலியாகியுள்ளனர் - Reviewed by Author on November 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.