அண்மைய செய்திகள்

recent
-

50க்கும் மேற்பட்டோர் பலி.. 70 பேர் படுகாயம் -திருமண மண்டபத்தில் தற்கொலை படை தாக்குதல்:


ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் குழுமியிருந்த திருமண மண்டபத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே உள்ள யுரேனஸ் திருமண மண்டபத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை நினைவுகூற இஸ்லாமிய சமய அறிஞர்களின் தலைமையிலான கூட்டம் குழுமியிருந்தது.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வெடி பொருட்களை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் அறிந்து 30 ஆம்புலன்ஸ் வாகனங்களில் விரைந்து வந்த ஊழியர்கள் வேகமாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்புக் பொறுப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.
படுகாயமடைந்தவர்களில் பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.




50க்கும் மேற்பட்டோர் பலி.. 70 பேர் படுகாயம் -திருமண மண்டபத்தில் தற்கொலை படை தாக்குதல்: Reviewed by Author on November 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.