மறைந்தும் மறையாத மாணிக்கம்-ஆழிக்குமரன் ஆனந்தன்
விவேகானந்தன் செல்வக்குமார் ஆனந்தன் என்ற ஆழிக்குமரன் ஆனந்தன்
ஈழத்தின் நீச்சல் வீரரும்,வழக்கறிஞரும் ஆவார்.பாக்கு நீரிணையை கடந்த
வீரர்.ஒன்பது உலக சாதனைகளை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர். சாதனை செய்யும் போது, உயிரை தழுவியவர்....
ஈழ தேசத்திற்கும்,பிறந்த வல்வெட்டித்துறைக்கும் உலக தமிழர்களுக்கும் பெருமை தேடியவர்...................................................
பிறப்பு:25 வைகாசி 1943
இறப்பு:6 ஆவணி 1984 கார்திகை மாதத்தில்,ஈழ மண்ணிற்கு பெருமை சேர்த்த ஆழிக்குமரன் ஆனந்தனின் அருமை பெருமை மற்றும் சாதனைகளை அடுத்த தலைமுறையினர் அறியச்செய்வது முக்கிய கடமையாகும்...
ஆழிக் குமரன் ஆனந்தன் ஈழத்து நீச்சல் வீரர்.பாக்கு நீரிணையை கடந்த வீரர் ஆவார். 9 உலக சாதனகளை படைத்து "கின்னஸ்"புத்கத்தில் இடம் பிடித்தவர்.பாக்கு நீரிணையை நீந்தி கடந்த நீச்சல் வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்கு நீரிணையை ஓரே தடவையில் நீந்திக் கடந்தார் ஆனந்தன்.
1975-ல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி,அங்கிருந்து மீண்டும் மன்னாருக்கு நீந்தி சாதனை படைத்தார்.அப்போது,ஈழத்தின் வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ்.டி.விநாயகம் அவருக்கு "ஆழி்க்குமரன்"என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
சிறு வயதில் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும் நீரில் மிதத்தல்,மெதுநடை,தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.
ஓர் ஈருந்து(மோட்டார் சைக்கிள்)தீநேர்ச்சியின்(விபத்தின்)விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது.ஆயினும்,அவர் மனம் தளரவில்லை.
இதன் பின்னர் இவர் ஆங்கில கால்வாயை நீந்தி கடக்க திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.
குறுகிய பயிற்சியில் ஆங்கில கால்வாயை நீந்தி கடக்க முற்பட்டார்.ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த போது,குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தை தழுவி்க் கொண்டார்.குளிர்ந்த கடளே கவலை தருகிறது.அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதுதான் அவர் இறப்பதற்கு முன் கூறிய கடைசி வார்த்தைகள் ஆகும்.இறப்பு ஆவணி 6-1984-ம் ஆண்டு ஆங்கில கால்வாயில் சாதனை செய்து கொண்டிருக்கும் போதே மரணத்தை தழுவினார்.....இனம்,மொழி மற்றும் ஈழ தேசத்திற்கு அவர் இட்ட புகழ் மாலை,பெருமை ஒவ்வொரு தமிழனும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்...
ஆழிக்குமரனின் உலக சாதனைகள்:-
1 பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தது.(1971-ம் ஆண்டு)
2 128 மணி நேரம் தொடர்ச்சியாக "டிவிஸ்ட்"நடனம் ஆடியது(1978)
3 1487 மைல் தூரத்தை 187 மணி நேத்தில் இரு சக்கர வாகனத்தில் கடந்தது(1979)
4 33 மணி நேரம் ஒற்றை காலில் நின்றது.(1979)
5 136 மணி நேரம் பால் பனசிங் செய்தது.(1979)
6 இரண்டு நிமிடத்தில் 165 தடவை site up செய்தது.
7 9100 தடவை high kicks செய்தது(1980)
8 நடந்தே 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் கடந்தது.(1981)
9 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் செங்குத்தாக நின்றது....
போன்ற ஆனந்தனின் சாதனை பட்டியல் அவருடன் நிற்காமல் இனி வரும் காலங்களில் அடுத்த தலைமுறையினர் ஈழ தேசத்திற்கு பணி மற்றும் பெருமை,சாதனைகளை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
எமது பாரம்பரியத்தினையும் கலாச்சாரத்தினையும் எம்முன்னோர்களையும் மறந்துவிடக்கூடாது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக
தொகுப்பு- நியூமன்னார் இணையம்
மறைந்தும் மறையாத மாணிக்கம்-ஆழிக்குமரன் ஆனந்தன்
Reviewed by Author
on
November 24, 2018
Rating:

No comments:
Post a Comment