அண்மைய செய்திகள்

recent
-

சிறுவர்களும் முன்னோர் காண்பித்த நல்ல பண்பாட்டை -மன்னார் அரச அதிபர் மோகன்ராஸ்

மன்னார் உலக தரிசன நிறுவனம் (வேல்ட் விஷன்) அதன் கீழ் இயங்கும் 54
சிறுவர் அமைப்புகளின் சிறுவர்களுக்கான கலாச்சார மற்றும் வேடிக்கை
நிகழ்ச்சி அதாவது 'சிறுவர்களின் தைரியமான எதிர்காலம்' என்னும் நிகழ்வை
மன்னார் நகர சபை மண்டபத்தில் வியாழக் கிழமை (22.11.2018) மன்னார் மாவட்ட வேல்ட் விஷன் முகாமையாளர் பிரேமசந்திரன் தலைமையில் நடாத்தியது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் C.A.மோகன்ராஸ், சிறப்பு அதிதியாக மன்னார் கல்வி வலையப் பணிப்பாளர் K.J.பிற்றலி, மன்னார் பிரதேச செயலக  கிராம அலுவலர்களுக்கான நிர்வாக அதிகாரி எஸ்.ஏ.ராதா பெர்ணான்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் C.A.மோகன்ராஸ் தொடர்ந்து பேசுகையில்

இன்று சிறுவர்களுக்கான முக்கியத்துவம் குறைவடைந்து வருகின்றது. இவர்கள் சிறுவர்கள்தானே என்ற ஒரு நோக்கில் நாம் அவர்கள் மட்டில் பல தடவைகள் அசமந்த போக்கில் இருந்து வருகின்றோம்.
ஆனால் இவர்கள்தான. எமது எதிர்காலத் தலைவர்கள் என்பதை எம்மில் பலர் மறந்து வருகின்றோம். சில சமயங்கள் சிறுவர்கள் எதாவது நல்ல விடயங்களை எமக்குச் சொன்னாலும் நாம் நீ சின்னப்பிள்ளை என்று மட்டம்தட்டி விடுவதும் உண்டு. இவ்வாறு நாம் செயல்படும்போது ஒரு வீரியம் கொண்ட சமூகமாக நாம் அவர்களை உருவாக்கவதில் பின்னடைவை நோக்கிச் செல்லுகின்றோம்.

இன்று இந்த விழாவில் குறிப்பிட்டுள்ளார்கள் 'சிறுவர்களின் தைரியமான
எதிர்காலம்' என்று. இன்று சிறுவர்கள் பயந்து ஒதுங்கி விடுபட்டு ஒரு
அட்டகாசமான போக்கில் போகும் பிள்ளைகளைத்தான் நாம் இன்று பார்க்கின்றோம். ஆனால் தற்பொழுது சிறுவர்களுக்கு ஒரு வித்தியாசமான தைரியம் வந்து விட்டது. அதாவது நவீன இலத்திரன்களை இலகுவாக இயக்குவதும் அதிலே மூழ்கிப் போவதுமே நாம் இவர்களின் தைரியத்தை காண்கின்றோம்.

ஆனால் இங்கு கூறப்படுவது அதுவல்ல. மாறாக சிறார்கள் ஒரு சிறந்த உதாரண புருஷர்களாக  எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்பதே ஆகும். இன்று நாம் எவரிடமும் கேட்டால் எனது பிள்ளை படித்து ஒரு பெரியாளாக வந்துவிட வேண்டும் என்பார்கள்.

படித்து பெரியாளாக வந்தபின் என்ன செய்யும் என்ற கேள்வி எம்மில் எழ
வேண்டும். நாம் பிள்ளைகளுக்கு பண்பாடு கொண்ட கல்வியையும் ஊட்டவேண்டும். நல்ல சமூக விழுமியங்களைத்தான் நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

நம் முன்னோர்கள் எமக்கு கற்றுத் தந்தது நல்ல பழக்க வழக்கங்களையே. இந்த
பழக்க வழக்கங்களைத்தான் நாம் இன்று பண்பாடு என்று சொல்லுகின்றோம். அதாவது நல்ல விழுமியங்கள் என்று சொல்லகின்றோம். இதைத்தான் நாம் இதை போற்றி பாதுகாக்க முனைகின்றோம்.

ஆனால் இன்று நாம் எமது பிள்ளைகளுக்கு இதை சரியாக கற்றுக் கொடுப்பதில்லை. இன்று நாம் ஒரு நாலு வயது பிள்ளையிடம் சிமாட் கையடக்க தொலைபேசியை கொடுத்து விட்டு படம் ஒன்றை அவ் பிள்ளை தொலைபேசியில் எடுத்து காண்பித்து விட்டதும் அந்த தாய்க்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் இந்த விடத்தில் நாம் இவ் பிள்ளைக்கு தைரியத்து கொடுப்பது பெரும்
மகிழ்வு என்று இங்கு கூறமுடியாது. மாறாக நல்ல நல்ல விழுமியங்கள்
பண்பாடுகளை காட்டிக் கொடுத்து அவற்றை அவ் பிள்ளை வெளிக்காட்டுமாகில் அவற்றில் நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் அவ் பிள்ளையை தட்டிக் கொடுக்க வேண்டும். இதுதான் அவ் பிள்ளைகளுக்கு தைரியமான வாழ்வு. சிலருக்கு நாம் ஒரு உண்மையை உரைக்கும்போது மிக கடினமாகத்தான் இருக்கும். பிள்ளைகளே நான் உங்களுக்கு தெரிவிப்பது எதிர்காலத்தில் நீங்கள் ஒரு அம்மாவாக, அப்பாவாக, ஒரு பெரிய அதிகாரியாக இருக்க போகின்றீர்கள்.

நீங்கள் நல்ல அறிவுள்ள ஒருவராக முன்வர விரும்புவது போன்று ஒரு நல்ல
பண்பாடு கொண்டவராவும் இருக்க முனைய வேண்டும். அதுவும் சமூத்துக்கு ஒரு பிரயோசனமுள்ள நல்ல அறிவு ஆற்றல் கொண்டவர்களாக நீங்கள் வளர்ச்சி அடைய முனைய வேண்டும்.

இன்று நாம் எமது சிறுவர்களை சிறுவர்களாக வளர்ப்பதில்லை. சிறு
பராயத்திலேயே சிறுவர்கள் சிமாட் தொலைபேசி கேட்டால் மோட்டர் பைக் கேட்டால் நாம் உடனே அவர்களுக்கு வாங்கி கொடுத்து விடுகின்றோம்.

ஆனால் இதனால் அவர்களுக்கு உள்ள தீமைகளை நாம் மறந்து விடுகின்றோம். இது பெற்றோர்களின் பாரிய தவறாக இருக்கின்றது. நமக்குத் தெரியும் இளம் கன்று பயம் அறியாது. அவ்வாறே சிறுவர் உங்களுக்கு மோட்டர் பைக் செலுத்தும்போதோ அவ்வாறு தொலைபேசியில் தேவையற்றதை பார்க்கின்றபோது அதனால் எற்படுகின்ற
பயம் ஆபத்தை நீங்கள் உணர மாட்டீர்கள்.

இப்பொழுது நாங்கள் முதுமையில் இருக்கும்போது நாங்கள் உங்களைப்போன்று ஒரு சிறுவராக இருக்கக்கூடாதா என்ற ஒரு அவாவாக இருக்கின்றது. ஆகவே பிள்ளைகளே இந்த வயதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள். அதற்கு நன்றாக படிப்பது, நன்றாக விளையாடுவது. பெற்றோர் ஆசிரியர்களுக்கு ஏற்ற பிள்ளைகளாக இருப்பது இவ்வாறான செயல்பாட்டில் இருப்பீர்களானால் உங்கள் மத்தியில் மகிழ்ச்சி திகழும். ஆகவே பிள்ளைகளே நீங்கள் மகிழ்ச்சியை தொலைத்து விட்டு நிம்மதியற்று வாழ முனையாது சமூகம் போற்றும் நல்ல உத்தமர்களாக வாழ உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்வி மட்டும் உங்களை திறமைசாலியாக ஆக்காது. பண்பாடு கொண்ட நல்ல கல்வியை நீங்கள் பெற்று நல்ல பிள்ளைகளாக வளர முற்படுங்கள் என இவ்வாறு தெரிவித்தார்.

சிறுவர்களும் முன்னோர் காண்பித்த நல்ல பண்பாட்டை -மன்னார் அரச அதிபர் மோகன்ராஸ் Reviewed by Author on November 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.