மரண தண்டனையை ஒழிக்க வாக்களித்த ஜேர்மன் மாகாணம் -
உள்ளூர் தேர்தலுடனே கூட நடைபெற்ற வாக்களிப்பில் அரசியல் சாசனப் பிரிவு 21ஐ ஒழிப்பதற்கு ஆதரவாக 83 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.
மரண தண்டனையை அனுமதிக்கும் 1946இல் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்வதற்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய ’1949ன் அடிப்படை சட்டம்’ என்று அழைக்கப்படும், மாகாண அரசியல் சாசனங்களை விட அதிக அதிகாரமுள்ள அரசியல் சாசனம் இயற்றப்பட்டது.
அது மரண தண்டனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் Hesse அந்த சட்ட திருத்தத்தை அமுல்படுத்தவேயில்லை, அதனால் அதன் மாகாண அரசியல் சாசனத்தில் மரண தண்டனை இடம்பெற்றிருந்தது.
1946க்கும் 1949க்கும் இடையில் Hesse நீதிமன்றங்கள் இரண்டுமுறை மரண தண்டனை வழங்கினாலும் அவை நிறைவேற்றப்படவில்லை.
அவை பின்னர் சிறைத் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டன. மரண தண்டனை வழங்கப்பட்டவர்களில் ஒருவர் தன் மனைவியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்.
இன்னொருவர் நாஸி மருத்துவரான Hans-Bodo Gorgass, ஹிட்லரின் euthanasia திட்டத்தின் கீழ் 100 பேரைக் கொன்றவர்.
மரண தண்டனையை ஒழிக்க வாக்களித்த ஜேர்மன் மாகாணம் -
Reviewed by Author
on
November 03, 2018
Rating:

No comments:
Post a Comment