ஈரானைத் தொடர்ந்து இந்தியா மற்றும் சீனாவுக்கு கெடு விதித்த டிரம்ப் -
இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார தடையை ஈரான் மீது விதித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டுடனான வர்த்தக உறவை வைத்துக்கொள்ளும் நாடுகளின் மீது இந்த பொருளாதார தடை பாயும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி பெறுவதை நிறுத்திக்கொள்ளுமாறு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 6 மாத காலம் கெடு விதித்துள்ளார்.
ஏனெனில், இந்த இரு நாடுகளும் தான் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் முன்னிலை வகிக்கின்றன. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், ‘பொறுத்திருந்து பாருங்கள். ஜனாதிபதி டிரம்ப்பின் கொள்கை இலக்கை எட்டுவோம். ஈரான் தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு’ என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள இந்த தடையை நாங்கள் பெருமையுடன் புறக்கணித்து செல்வோம் என ஈரான் ஜனாதிபதி ஹஸ்சன் ரவுகானி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈரானைத் தொடர்ந்து இந்தியா மற்றும் சீனாவுக்கு கெடு விதித்த டிரம்ப் -
Reviewed by Author
on
November 06, 2018
Rating:
No comments:
Post a Comment