அண்மைய செய்திகள்

recent
-

ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்: வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ -


மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்குத்தான் வரும் என்றே பலரும் நினைக்கிறோம். அதனால், ஆண்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. மார்பில் கட்டியே இருந்தாலும் அதை அலட்சியப் படுத்தி விடுவார்கள்.
அலட்சியத்தின் விளைவாக மார்பகப் புற்றுநோய் இறுதிக்கட்டத்துக்கு வந்த பிறகே பல ஆண்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள்
  • மார்பகங்களில் சின்ன சின்னதாக கட்டி வருவது.
  • மார்புக் காம்புகளின் வடிவத்தில் மாற்றங்கள் உண்டாதல்.
  • மார்புக் காம்பிலிருந்து நீர் வடிதல்.
  • மார்புக் காம்புகளில் வலி மார்பகம் சிவந்து போதல்.
  • மார்பில் ஏதேனும் வேறு சில மாற்றங்கள் உண்டாதல்.
மார்பகப் புற்றுநோயை எப்படி தடுப்பது?
உடல் எடையை சரியாகப் பராமரிப்பது
  • எந்த நோயாக இருந்தாலும் அதற்கு நாம் எடுத்துக் கொள்கின்ற உணவுகளின் மூலம் குணப்படுத்தலாம். மேலும் சில உணவுகளை புற்றுநோய் வருவதற்கு முன்போ எடுத்து கொண்டால் நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து மீண்டு நீண்ட நாள் உயிர் வாழ முடியும்.
உடற்பயிற்சிகள் செய்வது
  • தினமும் நடைப்பயிற்சி செய்வதின் மூலம் நோய்கள் நம்மை விட்டு தூரமாக ஓடிப்போய்விடும். மேலும் வாரத்துக்கு மூன்று மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.
சத்தான உணவுகளை உண்பது
  • ஃப்ளூபெர்ரி இதில் உள்ள ஆந்தோசினான்ஸ் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. வால்நட் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடணட்டும் ஒமேகா 3 எண்ணெயும் இருப்பதால் இது இதயத்துக்கும் மிக நல்லது.
எச்சரிக்கை
  • பெண்களின் மார்பகப் புற்றுநோயை விட வேகமாக உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவக் கூடியது ஆண்களின் மார்பகப் புற்றுநோய்.
  • அதனால், மார்பில் கட்டி தென்பட்டாலோ, வலி இருந்தாலோ, சிவந்து காணப்பட்டாலோ அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.

ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்: வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ - Reviewed by Author on November 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.