இலங்கை செங்கோல்
பாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னம்,
28 இறாத்தல் நிறையைக் கொண்டது,
48 அங்குல நீளமுடையது, கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டு, வெள்ளி, 18 கரட் தங்கம் மற்றும் நீலமாணிக்கக்கற்கள் போன்றவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல் 1949 ம் ஆண்டு பிரித்தானியப் பொதுச்சபையினால் இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
செங்கோல் இன்றி பாராளுமன்ற அமர்வு இடம்பெற முடியாது. சபாநாயகர் சபாமண்டபத்திற்கு வருகை தரும் போதும், வெளியேறும் போதும், அவருக்கு முன்னே, படைக்கலச்சேவிதர் செங்கோலை ஏந்தியபடி செல்ல, அவரைத் தொடர்ந்து பாராளுமன்றச் செயலாளர் நாயகமும், பிரதிச் செயலாளர் நாயகமும் உதவிச் செயலாளர் நாயகமும் செல்வர்.
பாராளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கான மேசைக்குக் கீழே, அதற்கென அமைக்கப்பட்டுள்ள தாங்கியில் படைக்கலச் சேவிதரால் வைக்கப்பட்டு செங்கோல் காணப்படும்.
இதன் பிரத்தியேக வடிவமைப்பும், நேர்த்திமிக்க அலங்கரிப்பும் புராதன இலங்கையின் வணக்கத்தலங்களின் வடிவமைப்பையும், அலங்காரத்தையும் ஒத்தது. அத்துடன் பாராளுமன்ற ஆட்சியின் விழுமியங்களும், தத்துவக் கோட்பாடுகளும் குறிக்கும், நித்தியத்தன்மை, அழகு, பரிபூரண சமாதானம், நிரந்தரத் தன்மை, வளர்ச்சி, செழுமை, தூய்மை என்பவற்றின் அடையாளமாகவும் இது திகழ்கின்றது.

இலங்கை செங்கோல்
Reviewed by Author
on
November 19, 2018
Rating:

No comments:
Post a Comment