இலங்கைக்கு மற்றொரு திடீர் தலையிடி! சுவிஸ் விடுத்த முக்கிய அறிவிப்பு -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமையால் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் பொருளாதார செழிப்பு, நல்லிணக்க செயற்பாடு ஆகியவற்றில் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துவரும் அரசியல் நெருக்கடி மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்த சமீபத்திய முடிவு ஆகியவற்றால் கவலை அடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வுகண்டு, நாட்டின் ஜனநாயகத்தை பேணுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் முதல் பிரஜையே நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மேலும், இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென இலங்கையை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு மற்றொரு திடீர் தலையிடி! சுவிஸ் விடுத்த முக்கிய அறிவிப்பு -
Reviewed by Author
on
November 11, 2018
Rating:

No comments:
Post a Comment