அடுத்தடுத்து கூட்டமைப்பின் தலைமையை தேடி வரும் முக்கியஸ்தர்கள் -
குறித்த சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அம்மையாரும் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இலங்கையில் நிலவும் அரசியல் குழப்ப நிலையை அடுத்து முக்கிய அரசியல் தலைமைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் சந்தித்து கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் வினவியபோது, "பேச வேண்டிய விடயங்களை எல்லாம் பேசினேன். இலங்கையில் என்ன நடந்தாலும் அது நாட்டின் அரசமைப்புக்கு இணங்க - நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலத்துடன் நடைபெற வேண்டும் என்று என்னைச் சந்தித்த இந்தியப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தேன். இந்தியா எமது அயல் நாடு. எனவே, இலங்கை விடயத்தில் நடுநிலையுடன் நிதானமாகச் செயற்பட வேண்டும் என அவர்களிடம் கூறினேன்" - என்றார்.
அடுத்தடுத்து கூட்டமைப்பின் தலைமையை தேடி வரும் முக்கியஸ்தர்கள் -
Reviewed by Author
on
November 01, 2018
Rating:

No comments:
Post a Comment