82 ஆண்டுகால சாதனையை தகர்த்து வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்! -
பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் 4வது நாளான இன்று நியூசிலாந்து வீரர் வில்லியம் சோமர்வில்லேயின் விக்கெட்டை யாசிர் ஷா வீழ்த்தினார்.
இது டெஸ்ட் அரங்கில் அவரது 200வது விக்கெட்டாகும். இதன்மூலம் அதிவேகமாக டெஸ்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். யாசிர் ஷா 33 டெஸ்ட்களிலேயே இந்த சாதனையை செய்துள்ளார்.

இதற்கு முன்பு 1936ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் கிளாரி கிரிம்மெட், 36 டெஸ்ட்களில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்து வந்த நிலையில், யாசிர் ஷா 82 ஆண்டுகால சாதனையை உடைத்துள்ளார்.
இந்திய வீரர் அஸ்வின் தனது 37வது டெஸ்டிலும், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் 38வது டெஸ்டிலும், தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் 39வது டெஸ்டிலும் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
82 ஆண்டுகால சாதனையை தகர்த்து வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்! -
Reviewed by Author
on
December 07, 2018
Rating:
No comments:
Post a Comment